மதுரையை மிரட்டிய மாணவர் போராட்டம்

மதுரையை மிரட்டிய மாணவர் போராட்டம்

2 mins read

மதுரை: சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் உக்கிர மான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக் கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தை மிரட்டும் வகையில் மாணவர் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. அங்கு லட்சக்கணக் கானோர் திரண்டனர். அலங்காநல்லூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை தமுக்கம் சாலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர் கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட் டத்தில் பொதுமக்கள், பெண்கள், கைக்குழந்தைகள், பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர். நேற்று விடுமுறை அறிவிக்கப் பட்டதால் மாணவர் கூட்டம் அலைமோதியது. அணி அணி யாக அனைவரும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமுக்கம் சாலையில் திரண்ட மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப் பினர். மேலும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் உள் ளிட்ட பாரம்பரிய விளையாட்டு களை மாணவர்கள் போராட்டக் களத்தில் விளையாடி உற்சாகப் படுத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத் தில் வியாபாரிகள், தனியார், அரசு ஊழியர்களும் பங்கேற்று உள்ளனர்.

கோவை வஉசி மைதானத் தில் மாணவர்கள் நேற்றும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பகலில் கொளுத்தும் வெயிலையும் இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக் கணக்கான மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கறுப்பு முத்திரை அணிந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டுத் தடைக்குக் காரணமான 'பீட்டா' அமைப்பைத் தடை செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர். சில மாணவர்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டியிருந்த னர். ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் குடும்பத்தின ருடன் பங்கேற்றனர். இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஐடி ஊழியர்களும் தொடர்ந்து நேற்று போராட்டக் களத்தில் இறங்கி பீட்டாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஜல்லிக் கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.