காவல்துறை அதிகாரி: போராட்டத்தில் பங்கேற்றதால் பயமில்லை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரி வித்த காவல்துறை அதிகாரிக்கு மாணவர்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர். சீருடையில் இருந்த மதியழகு என்ற காவல்துறை அதிகாரி, "எந்தப் போராட்டத்திலும் காவல் துறையினர் கலந்துகொண்டது இல்லை. ஆனால் இந்தப் போராட் டம் மிக முக்கியமானது, இதனால் நானும் கலந்துகொண்டேன்" என்றார். இவரது பேச்சைக் கேட்ட இளையர்கள் ஆர்ப்பரித்து அவரை தோளில் சுமந்து பாராட்டினர். மேலும் பேசிய அந்த அதிகாரி, "போராட்டத்தில் பங்கேற்றதால் எனக்குப் பயம் இல்லை. உயர் அதிகாரிகளைப் பார்த்துவிட்டு ஓடுவதற்கு இங்கு வரவில்லை.

செயற்கை உரங்களைப் பயன் படுத்தி மண்ணைச் சாகடித்து விட்டனர். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள் கின்றனர். இதனைத்தடுக்க அரசு என்ன செய்தது. போராட்டம் வெற்றி பெறும். இதன் பின்னர் மணல் திருட்டுக்கு எதிராக போராட வேண்டும்," என்றார் அதிகாரி மதியழகு(படம்).

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!