ஓ. பன்னீர்செல்வம்: மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்

மக்கள் விருப்பப்படி ஜல்லிக் கட்டைத் தாமே தொடங்கி வைக்கப்போவதாகத் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என்றும் இந்தத் தடைக்கு மூல காரணமாக இருந்த பீட்டா அமைப் பைத் தடை செய்யவேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடந்த நான்கு நாட்களாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் புதுடெல்லி சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி னார். அத்துடன், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அவசர சட்ட வரைவு நேற்று மாலை இந்திய அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம் கூறினார். அதிபர், தமிழக ஆளுநர் ஆகியோரின் ஒப்புதல் பெற்று இன்று அல்லது நாளை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். "வாடிவாசல் விரைவில் திறக் கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப் படும். மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கிவைப்பேன். "ஜல்லிக்கட்டுக்குத் தடை வர இனி வாய்ப்பில்லை. ஜல்லிக் கட்டுக்குத் தடை வந்தால் அதனை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்," என்று முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித் தார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இன்று காலைக் குள் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று அறிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று அவரைச் சந்தித்துப் பேசினார். "ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முடிவு அறி விக்கப்படும். பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!