கனமழை, வெயிலில் நீடிக்கும் போராட்டம்

சென்னை: இடைவிடாது பெய்யும் கனமழை, சுட்டெரிக்கும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக் கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர், ஈரோடு, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக் காக களமிறங்கி உள்ள போராட் டக்காரர்கள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். உச்ச நீதிமன்றத் தடை காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக் கட்டு நடைபெறவில்லை. இதனால் மக்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கா னோர் வீதியில் இறங்கி ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் உலக நாடுகளின் பார்வை தமிழகம் நோக்கி திரும்பி உள்ளது. இந்நிலையில் கடலூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, கோபி செட்டிப்பாளையம், அறந்தாங்கி உள்ளிட்ட தமிழக பகுதிகளிலும் புதுவையிலும் நேற்றும் வெள்ளிக் கிழமை மாலையும் கனமழை பெய்தது. ஆனால் மழைக்கு அசராத இளைஞர்கள் கூட்டம் தொடர்ந்து அறவழியில் தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் கடு மையாக இருந்தது. இதனால் மெரீனா கடற்கரையில் கூடியிருந்தோர் களைப்படைந்தனர். பெண்களில் சிலர் மயக்கம் அடைந்த தால் பரபரப்பு நிலவியது. ஆனா லும் போராட்டக் களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என இளையர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே, மதுரையிலும் சேலத்திலும் சிறைபிடிக்கப்பட்ட மூன்று ரயில்களை விடுவிக்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்ட னர். இதனால் கடந்த மூன்று தினங்களாக அந்த ரயில்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

வியாழக்கிழமை திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை, மதுரை ரயில் நிலையத்தின் இரண்டாவது தள மேடையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறித்து நிறுத்தினர். இந்த ரயில் இதுவரை கிளம்பவில்லை. ஐநூறுக்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் இரவு, பகலாக படுத்துக் கிடக்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ஒரு மில்லியன் பேர் கூடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று வெயில் சுட்டெரித்த போதிலும் போராட்டக்கார்கள் அசைந்து கொடுக்கவில்லை. படம்: சதீஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!