மெரினாவை ஒருங்கிணைத்த 12 குழுக்களின் பங்கு

சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை கட்டிக்காக்க மாநி லம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களும் இளைஞர்களும் கிளர்த்தெழுந் தனர். சுமார் 3 மில்லியன் பேர் நேற் றைய போராட்டங்களில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இதுவரை கண்டிராத புதிய புரட்சியாக இது கருதப்படுகிறது. சென்னையில் நேற்று மெரினா கடற்கரையில் சுமார் 1 மில்லி யனுக்கும் அதிகமானோர் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். அரசியல்வாதிக ளையோ சினிமாக்காரர்களையோ அவர்கள் அனுமதிக்கவில்லை. இளைஞர்கள் போராட்டத்துக் கும் ஒரு மையப்புள்ளி உள்ளது. அதைக் கண்டுபிடிக்க கடந்த 4 நாட்களாக உளவு துறை படாதபாடு பட்டது. ஆனால் அவர்களால் அந்த மையப் புள்ளியை நெருங்கக் கூட இயலவில்லை.

உண்மையில் தமிழகத்தைத் தட்டி எழுப்பிய அந்த மையப் புள்ளியாக 136 பேர் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. யார் இந்த 136 பேர்? என்று தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஆர்வம் ஏற்படலாம். இந்த 136 பேரும் ஒரு கை ஓசையாக செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை ஜல்லிக்கட்டு ஒன்று சேர்க்கவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளம்தான் ஒன்று சேர்த்திருந்தது. சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தபோது இணையத்தளத்தில் இவர்கள் 136 பேரும் ஒருவருக் கொருவர் அறிமுகம் ஆனார்கள்.

மெரினா போராட்டக்களத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!