போராட்டத்திற்கு வருகை தந்த சகாயத்திற்கு பலத்த வரவேற்பு

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஐஏஎஸ் அதி காரி சகாயம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், அங்கு போராட்டத் தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை பாராட்டினார். சகாயத்தின் இந்த திடீர் வருகையும் பாராட்டும் மெரினா கடற்கரையில் கூடியுள்ள லட்சக் கணக்கான இளையர்களுக்குப் பெரும் உற்சாகம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள், குறிப்பாக இளையர்கள் தன்னெ ழுச்சியாகப் போராடி வருகிறார்கள்.

கடந்த ஐந்து தினங்களாக லட்சக்கணக்கானோர் சென்னை யில் உள்ள மெரினா கடற்கரையில் கூடி, ஜல்லிக்கட்டு நடத்த வலி யுறுத்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையு லகத்தினர், வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும் வாழ்த்தையும் தெரி வித்துள்ளனர். இந்நிலையில் ஐஏஎஸ் அதி காரி சகாயமும் இந்தப் போராட் டத்தை ஆதரித்துள்ளார். நேற்று முன்தினம் அவர் மெரினா கடற் கரைக்கு நேரில் சென்று இளை ஞர்களுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளைப் புறக் கணித்த போராட்டக்குழுவினர், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மட்டும் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். பலரும் கைபேசியில் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண் டனர். தமிழ்க் கலாசாரத்தின் வெளிப் பாடான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என அண்மையில் நாமக்கல்லில் நடை பெற்ற பொங்கல் விழாவில் பேசிய போது சகாயம் கூறியிருந்தார்.

"வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நம் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது. எனவே இது மரபுகளின் தொடர்ச்சி. ஜல்லிக் கட்டுக்கு என் ஆதரவுண்டு," என்றார் சகாயம். அவரது இப்பேச்சும், கடற்கரை வருகையும் ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெரினா கடற்கரைக்கு வந்த சகாயம். படம்: தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!