‘தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது’

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரு வது தேவையற்றது என்றும் அதற்கான அவசியம் எழவில்லை என்றும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொரப்ஜி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றுவது, அரசியல் சட்டப்படி செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "பொதுவாக, உடனடி நடவ டிக்கை தேவைப்படுகிற நெருக்கடி யான சூழ்நிலையில்தான் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே, தற்போதைய சூழ்நிலை யில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றுவது அரசியல் சட்டப்படி செல்லும் என்று நான் கருதவில்லை. இருப்பினும், எந்த வி ஷயமாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்பது நல்லது," என சோலி சொரப்ஜி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

போராட்டத்தைக் கைவிடு மாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ள அவர், சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தை உணர்ச்சிகள் மிஞ்சப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது என்று கூறியுள்ளார். "அவ்வாறு அனுமதித்தால் உணர்ச்சிவயப்பட்ட மக்களின் கருணையில்தான் நாம் இருக்க வேண்டி இருக்கும். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசை மத்திய அரசு அழைத்து பேசுகிறது. அது நல்லதுதான். எனினும் இச்சூழ்நிலையில், அவ சர சட்டம் என்பது தேவையில்லை என்பதே என் கருத்து," என்று சோலி சொரப்ஜி தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!