ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கவேண்டும்: அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்து

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தானாகச் செய்யவேண்டியதை தடியால் அடித்துதான் செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் நிலவுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். "அவசர சட்டம் மட்டும் கொண்டு வந்தால் போதாது, காட்சிப்படுத்தக்கூடிய பட்டியலி லிருந்து காளையை நீக்கக்கூடிய அந்தச் சட்டத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். அதுதான் நிரந்தர தீர்வாக அமைந்திடும். "இந்த ஆண்டு மட்டுமல்ல; எந்த ஆண்டாக இருந்தாலும் பொங்கல் விழா என்று வருகிற போது ஜல்லிக்கட்டுக்கு தடையே இருக்கக்கூடாது.

அப்படி ஒரு சட்டத்தை இந்த அரசு உருவாக்க முன்வர வேண்டும். எனவே, மாநில அரசின் அவசர சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசு தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெற்று காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்திட வழிவகை செய்யவேண்டும்," என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, அதிபரின் கையொப்பமும் கட்டாயம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபரின் கையெழுத்து இல்லை யெனில் பின்னாட்களில் சட்டச் சிக்கல் ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத் தம் செய்வதன் மூலமே ஜல்லிக் கட்டை பாதுகாக்கமுடியும் என்று தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!