தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடைபெற ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. எனினும் ஜல்லிக்கட்டுக் காக களமிறங்கியுள்ள போராட்டக் குழுவினர் இதை ஏற்க மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் கூட போராட் டக்காரர்கள் அதிகளவில் கூடியுள்ளனர். பலர் தங்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்தாருடன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரத் தீர்வு கோரி நீடிக்கிறது போராட்டம்
1 mins read

