ரயில் சரிந்து 39 பேர் பலி: நாசவேலை என சந்தேகம்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று ஆந்தி ராவில் தடம்புரண்டதில் 36 பேர் மரணமடைந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந் ததாகவும் விரைவாகச் சென்று கொண்டு இருந்த ஹிராகந்த் விரைவு ரயிலின் ஒன்பது பெட்டி கள் திடீரென்று தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதாக வும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லையில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நடைபெற்றதால் இது ஒரு நாச வேலை என்று சந்தேகிக்க இடம் இருப்பதாகவும் அவர்கள் தெரி வித்தனர். நக்சல் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது என்பதால் அதிகாரிகளுக்கு அந்தச் சந்தேகம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

நாட்டின் குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தீவிரவாதிகளின் கைவரிசை யாக இருக்கலாம் என்றும் அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டது. எனவே, சம்பவம் பற்றி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மூலம் விசாரணை நடத்த உத் தரவிடப்படும் என ரயில்வே போலிசார் தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தல் பூரிலிருந்து ஆந்திரா வழியாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கிச் சென்றபோது அந்த ரயிலின் பெட்டிகள் சரிந்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!