இந்தியாவில் 45% போலி வழக்கறிஞர்கள்

இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் களில் கிட்டத்தட்ட 45 விழுக் காட்டினர் போலியாக இருக்கக் கூடும் என்றும் இந்திய வழக் கறிஞர்கள் சங்கம் (பார் கவுன்சில்) கடந்த ஈராண்டுகளாக நடத்தி வரும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர், மற்ற நீதிபதிகள் முன்பு, சங்கம் மேற் கொண்டுள்ள உண்மைத்தன்மைச் சோதனையின்மூலம் நாட்டிலுள்ள வழக்கறிஞர்களில் 55-60 விழுக் காட்டினர் மட்டுமே முறையான கல்வித் தகுதியைக் கொண்டிருக் கும் உண்மையான வழக்கறிஞர்கள் என்று 'பார் கவுன்சில்' தலைவர் மனன் குமார் மிஸ்ரா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

"இந்த உண்மைத்தன்மைச் சோதனை நிறைவுக்கு வந்ததும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 55-50 விழுக்காடாகக் குறையும். இதனால் நமது சட்டத் தொழிலின் தரம் நிச்சயமாக உயரும்," என்று அவர் சொன்னதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறியது. "2012 'பார் கவுன்சில்' தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, 14 லட்சம் பேர் அந்தத் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தனர். ஆனால், உண்மைத்தன்மைச் சோதனை தொடங்கப்பட்டபின் வாக்களிக்கத் தகுதி கோரி 6.5 லட்சம் விண் ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன," என்று அவர் குறிப்பிட்டார். மாநில வழக்கறிஞர் சங்கங் களில் உறுப்பினராக இருந்து, கீழ்நிலை நீதிமன்றங்களிலும் உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு களில் முன்னிலையாகத் தகுதி உடைய வழக்கறிஞர்களே இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!