சென்னையில் மாணவர் கள், இளைஞர்கள் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத் திய போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்பு கள் புகுந்து வன் முறை வெடிக்க வைத்தனர் என்று கூடுதல் ஆணையாளர் சே ஷ சாயி கூறியுள்ளார். உண்மையிலேயே போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினர். மாணவர்கள் போர் வையில் போராட்டக் களத்தில் புகுந் தவர்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது அவர் கள் நோக்கமல்ல. அரசை செயல் படவிடாமல் தடுப்பதுதான் அவர் களது நோக்கமாக இருந்தது என்றார் சேஷசாயி.
போலிஸ்: வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோத அமைப்பினரே
1 mins read

