பாலியல் தொல்லை புகார்; பதவி விலகிய ஆளுநர்

1 mins read
49dde2f9-802a-407a-8260-3e3d684988c9
-

இந்தியாவின் மேகாலயா மாவட்டத்தின் ஆளுநர் வி. சண்முக நாதனுக்கு எதிராகப் பாலியல் தொல்லை புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகி உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் மேகாலயா மாநில ஆளுநராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத் திலிருந்து இவர் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுந ராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில், மேகாலயா ஆளுநர் மாளிகையின் கண்ணி யத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் சண்முகநாதன் நடந்து கொண்டதாக அதன் ஊழியர் களில் கிட்டத்தட்ட 100 பேர் புகார் செய்தனர்.

அவர்கள் கையெழுத்திட்ட புகார் கடிதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் பிரணாப் முகர்ஜி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, 67 வயது சண்முகநாதன் தமது பதவி யிலிருந்து நேற்று முன்தினம் இரவு விலகினார். ஆளுநர் மாளிகையை சண்முகநாதன் 'இளம்பெண்கள் கிளப்' ஆக மாற்றிவிட்டதாக அவருக்குக் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் அதிருப்தி குரல் எழுப்பி உள்ளனர்.

தமக்கு எதிராக மேகாலயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பாலியல் தொல்லை புகார் செய்ததை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரான வி. சண்முகநாதன் மேகாலயா ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். படம்: இணையம்