சிவகங்கை: சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டின்போது 48 பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் 'சிராவயல் பொட்டல்' என்ற திடலில் இப்போட்டி நடந்தது. இப்பகுதியில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சு விரட்டு நடந்து வருகிறது. இம்முறை முந்நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. நாலாபுறமும் சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலைப் பிடித்து அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களில் சுமார் 48 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டைக் கண்டுகளித்தனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டு: 48 மாடுபிடி வீரர்கள் காயம்
1 mins read

