மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

1 mins read
1ce003aa-ed3b-4600-8e4e-3bd4b7e855e9
-

இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 69வது நினைவு நாளையொட்டி நேற்று புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிபர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள், காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியா முழுவதும் ஜனவரி 30ஆம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக அஹிம்சை வழியில் போராடிய காந்தி 1948ல் ஜனவரி 30ஆம் தேதி கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படம்: ஏஎஃப்பி