அண்ணாவின் 48வது நினைவு நாளில் முதல்வர் அஞ்சலி

அண்ணாவின் 48வது நினைவு நாளில் முதல்வர் அஞ்சலி

1 mins read
cfd51801-a309-483d-a6a5-ac7fa7cf8f41
-

தமிழகத்தின் முன்னாள் முதல் வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினை விடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செய லாளர் சசிகலா நடராஜன் ஆகி யோர் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் புடை சூழ மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தமிழ கத்தின் முன்னாள் முதல்வர் களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக் கும் சென்று அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அண்ணா நினைவிடத்தில் அதிமுகவினருடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக செயலாளர் சசிகலா. படம்: சதீ‌ஷ்