நாகாலாந்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு

நாகாலாந்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு

1 mins read
cf2cc5c4-f063-4fb1-8ef8-63da686e2b85
-

கொகிமா: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் போராட்டம் நடத்தி வரும் பழங்குடியினர் கொஹிமா வில் உள்ள அரசு அலுவலகங் களுக்குத் தீ வைத்தனர். சட்டம், ஒழுங்கு நிலைமை மோசம் அடைந் ததைத் தொடர்ந்து ராணுவப் படையினர் கொகிமாவில் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்து அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் பழங்குடியினர் கடந்த 2 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பழங்குடியின அமைப்புகள், தேர் தலை ஒத்திவைக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனாலும், தேர்தலை நடத்து வதில் மாநில அரசு தீவிரமாக இருப்பதால் பழங்குடியின அமைப்பு கள் தலைநகர் கொஹிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. போ ரா ட் ட க் கா ர ர் க ளா ல் மாநிலத் தேர்தல் ஆணைய அலு வலகம், ஆட்சியர் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கொஹிமா மாநகராட்சி கட்டடம், போக்கு வரத்து அலுவலகம், கலால் அலு வலகம் உள்ளிட்ட அலுவலகங் களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் காவல்துறை யினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் உடல்கள் திபாபூருக்கு நேற்று எடுத்து வரப்பட்டதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்தது.2017-02-04 06:00:00 +0800