சென்னை கடலில் எண்ணெய்: தெற்கே 32 கி.மீ. வரை பாதிப்பு; மீன் வளம் கெட்டது

சென்னை கடலில் எண்ணெய்: தெற்கே 32 கி.மீ. வரை பாதிப்பு; மீன் வளம் கெட்டது

1 mins read
45dc475c-b5be-4ed8-a839-5639f91956ba
-

சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே இரண்டு சரக்குக் கப்பல்கள் சென்ற சனிக் கிழமை நேருக்குநேர் மேதிக் கொண்டன. இதில் இரு கப்பல்களும் சேத மடைந்தன. சரக்குக் கப்பலில் இருந்த டீசல் வெளியேறி கடலில் கலந்தது. கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் னார்வ இளைஞர்கள் இணைந்து எண்ணெய்யை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கடலில் எண்ணெய் தெற்கே 32 கி.மீ. தொலைவுக்குப் பரவி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலவாக்கம் கடற்கரையையும் கெடுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய்ப் படலம் மேலும் தெற்கே பதவி உத்தண்டி கடற்கரையைத் திங்கட் கிழமை தொட்டுவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் சென்னை ராமகிருஷ்ணா நகர் குப்பக் கடற் கரையில் இருந்து ஏறக்குறைய 70 டன் எண்ணெய்ப் படலம் அகற்றப் பட்டு இருப்பதாக இந்தியக் கடலோர காவல் படை தெரிவித் தது. பாதிப்பை மதிப்பிட அதி காரிகள் குழுவை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பியது. திமுக மேலவை உறுப்பினர் கனிமொழி வியாழக்கிழமை இந்தப் பிரச்சி னையை மன்றத்தில் எழுப்பினார்.

சென்னை கடற்கரை எண்ணெய் ஒழுக்கு, தெரிவிக்கப்பட்டதைவிட பத்து மடங்கு அதிகம் என்று ஊடகங்கள் தெரிவித்தன. மோதிக்கொண்ட கப்பல்களைத் தடுத்துவைக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் இது மத்திய, மாநில அரசுகள் கையில் இருப்பதாகவும் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது. படம்: ஊடகம்