சென்னை: குடியிருப்புப் பகுதியில் ராக்கெட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அயனாவரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. இங்குள்ள சன்னிவேல் அடுக்குமாடிக் குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வெடிபொருள் போல் காட்சியளித்த ஒரு பொருளைக் கண்ட அக்குடியிருப்பு வாசிகள், உடனடியாக காவல்துறைக் குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலி சார் அது ராக்கெட் குண்டு என்பதை உறுதி செய்தனர். மேலும் அது ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்ப தும் தெரியவந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்றாலும் குடியிருப்புப் பகுதியில் ராக் கெட் குண்டு எப்படி வந்தது என்பது குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.
குடியிருப்புப் பகுதியில் சிக்கிய ராக்கெட் குண்டு
1 mins read

