சீண்டும் திருநாவுக்கரசர்; திமுக தலைமை அதிருப்தி

சீண்டும் திருநாவுக்கரசர்; திமுக தலைமை அதிருப்தி

1 mins read
a3ac07be-700b-4773-a7d9-94838ab2256e
-

சென்னை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக திமுக தலைமை அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. அண்மைக்காலமாக அதி முகவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் திருநாவுக் கரசரின் செயல்பாடுகள் இருப்ப தாக திமுக முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்காக காங்கிரஸ் யாருக்காகவும் காத் திருக்கத் தேவையில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திமுகவை மனதிற்கொண்டே அவர் இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது.