நெல்லை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 தென்மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பொதுமக்களுடன் இணைந்து அந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஊர்மக்கள் உட்பட ஏராளமானோர் அப்பணியில் ஈடுபட்டனர். "தமிழகம் முழுவதும் இத்தகைய விஷத்தன்மையுள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு திரண்ட மாணவர்களும் இளையர்களும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபடவேண்டும்," என்றார் வைகோ.
கருவேல மரங்களை அகற்றிய வைகோ
1 mins read
-

