எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் குழந்தை பலி: வேலூர் மக்கள் பீதி

எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் குழந்தை பலி: வேலூர் மக்கள் பீதி

1 mins read

வேலூர்: எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் ஒன்னேகால் வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் வேலூரில் சோகத்தையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. ஓட்டேரியைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான செபாஸ்டின் கடும் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்த நிலையில், எச்1என்1 காய்ச்சலே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூரில் இக்காய்ச்சல் பரவுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.