அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, தமிழ்நாட்டின் 21வது முதல்வராகவும் மூன்றாவது பெண் முதல்வராகவும் அரியணை ஏறி சாதனை படைக்க முயன்றுவரும் நேரத்தில், பலவித சட்டச் சிக்க லில் அவர் வசமாகச் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா, நேற்று செவ்வாய்க் கிழமை முதல்வராகப் பதவி ஏற்க இருந்ததாகவும் ஆனால் தலை நகரில் இருந்து சென்னைக்கு வர இருந்த மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேரே மும் பைக் குச் சென்றுவிட்டதால் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடிய வில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது. இருந்தாலும் "ஆளுநர் இன்றோ (செவ்வாய்க்கிழமை) நாளை புதன்கிழமையோ சென்னை திரும்பிவிடுவார்," என்று ஆளுநர் மாளிகை நேற்று தெரிவித்தது.
இவ்வேளையில், சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக் கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத் தில் வெளியாக இருப்பதால் முதல்வர் பதவி ஏற்றாலும் தீர்ப்பு சசிகலாவுக்குப் பாதகமாக வந் தால் முதல்வர் பதவியை அவர் கைவிடவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.

