உயர் நீதிமன்ற நீதிபதி மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

உயர் நீதிமன்ற நீதிபதி மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

1 mins read

புதுடெல்லி: முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் எழுவர் அடங்கிய அமர்வு, தற்போதைய கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான சி.எஸ். கர்ணன் மீது அவமதிப்பு வழக்குத்தொடுத்துள்ளது. இதன் தொடர்பில் விளக்கம் கேட்டு நீதிபதி சி.எஸ் கர்ணனுக்கு அமர்வு கடிதம் அனுப்பியிருக்கிறது. நீதிமன்ற நிர்வாக நடவடிக்கை களுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் நீதித் துறைக்கு களங்கம் விளைவித்ததாகவும் அவர் மீதான அவமதிப்பு வழக்கு கூறுகிறது.

தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகளுக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும் நீதிபதி சி.எஸ் கர்ணன் தவறான முறையில் கடிதம் எழுதியதாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர் தலைமையிலான அமர்வு, இம் மாதம் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக் கும்படி அவருக்கு உத்தரவிட்டுள் ளது. உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி மீது நீதிமன்றமே அவமதிப்பு வழக்குத் தொடுத்துள் ளது இதுவே முதல்முறை.