ஓபிஎஸ் அணியில் மதுசூதனன்

ஓபிஎஸ் அணியில் மதுசூதனன்

1 mins read
bb580378-68ab-4e18-92d5-9ac7f2a6c98e
-

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுவது உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே காலஞ்சென்ற ஜெயலலிதா உருவாக்கிய 'நால் வர் அணி'யில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி இருவரும் பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரி வித்துள்ளனர். வைத்திலிங்கமும் விரைவில் இந்தப் பக்கம் வருவார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான பி.எச். பாண்டியன், மதுசூதனன் உள் ளிட்டோரும், ஐந்து எம்எல்ஏக் களும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தி ருப்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.