ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்கிறார் ஜி. ராமகிருஷ்ணன்

ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்கிறார் ஜி. ராமகிருஷ்ணன்

1 mins read

சென்னை: தமிழத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசி யல் சட்ட நடைமுறைப்படி செயல் பட்டிருக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ் ணன் கூறியுள்ளார். நெருக்கடி நிலவுகிறது என்பது தெரிந்தும் சென்னை வராமல் மும்பைக்குச் சென்றதும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக் குரியது என அவர் சாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநி லங்களில் ஆளுநர்களை மத்திய பாஜக அரசு, தம் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் குறைகூறியுள்ள அவர், கடந்த காலத்தில் காங் கிரசும் இதே அணுகுமுறையைப் பின்பற்றியதாகக் கூறியுள்ளார்.