முதல்வர்: மக்கள் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும்

முதல்வர்: மக்கள் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும்

1 mins read
4af039f6-e7ec-4617-83ad-40123a2ea65b
-

சென்னை: மக்கள் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இந்த நோக்கத்திற்காகவே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தம்முடன் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அவருக்கு ஆதரவு தெரி வித்தனர். இதையடுத்த சில மணி நேரங்களில் அமைச்சர் பாண்டிய ராஜனும் முதல்வர் பன்னீர்செல் வத்தை நேரில் சந்தித்து அவரை ஆதரிப்பதாக கூறினார். அவரை வரவேற்றுப் பேசிய முதல்வர், மக்களின் கருத்துக்களை ஏற்று அமைச்சர் பாண்டியராஜன் தம்மை ஆதரித்துள்ளதாக தெரிவித்தார்.