சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தினந் தோறும் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடுகின்றனர். சசிகலா தரப்பில் இருந்து வரக்கூடிய தலைவர்கள், நிர்வாகி கள், இதர பிரமுகர்களை வரவேற்று முழக்கங்கள் எழுப்பு வது, பாடல்கள் பாடுவது, உற்சாக நடனம் ஆடுவது என்று இவர்கள் அசத்துகின்றனர். இதற்கிடையே மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கட்சினரால் தினந்தோறும் களைகட்டும் ஓபிஎஸ் இல்லம்
1 mins read
-

