சென்னை: மத்திய அரசின் ஆலோசனையை பொறுத்தே ஆளுநரின் முடிவு அமையும் என தாம் கருதுவதாக தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் என்ன முடிவு எடுப்பார் என்று தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவை முதல்வராகப் பதவி ஏற்க அழைக்கலாம். அல்லது முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம்," என்றார் ரோசய்யா.
'மத்திய அரசின் ஆலோசனையைப் பொறுத்தே தமிழகத்திற்கான முடிவு அமையும்'
1 mins read
-

