பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பது பற்றி புதுவை எம்எல்ஏக்கள் ஆலோசனை

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பது பற்றி புதுவை எம்எல்ஏக்கள் ஆலோசனை

1 mins read

புதுவை: புதுவை அதிமுக யார் பக்கம்? என்பதை விரைவில் அறிவிக்க இருப்பதாக அம்மாநில சட்டப் பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், புதுவையின் நலனை முன்வைத்தே எத்தகைய முடிவும் எடுக்கப்படும் என்றார். நேற்று காலை புதுவை அதிமுகவின் நான்கு எம்எல்ஏக்களும் ஆலோச னையில் ஈடுபட்டனர். அப்போது சசிகலா, முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்று மிகத் தீவிரமாக ஆலோசிக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன், தங்கள் முடிவை விரைவில் அறிவிப்பதாக கூறினார். நான்கு எம்எல்ஏக்களும் ஒருமித்த முடிவுக்கு வந்தி ருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நால்வரும் இன்று அல்லது நாளை சென்னை சென்று அங்கு கட்சியினரை சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது.