சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துகளைப் பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமது கையெழுத்தை சசிகலா தரப்பு போலியாகப் போட்டுள்ளது என்று முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு பெண் எம்எல்ஏ மனோரஞ்சிதம் கூறியுள்ளார். "நான் எதிலும் கையெழுத்தும் போடவில்லை. சசிகலா தரப்பினரைச் சந்திக்கவும் இல்லை," என்று மனோரஞ்சிதம் தெரிவித்துள்ளார்.
போலி கையெழுத்து: சசிகலா தரப்பு மீது பெண் எம்எல்ஏ குற்றச்சாட்டு
1 mins read

