திருநாவுக்கரசர்: மத்திய அரசு ஆளுநரை நிர்ப்பந்திக்கக் கூடாது

திருநாவுக்கரசர்: மத்திய அரசு ஆளுநரை நிர்ப்பந்திக்கக் கூடாது

1 mins read

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து முடிவெடுப்பது தொடர்பில் ஆளுநரை மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலையான அரசை ஏற்படுத்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். "அரசியல் சட்டப்படி எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதன்படி சுதந்திரமாகச் செயல்பட்டு, ஆளுநர் விரைந்து முடிவு செய்ய வேண்டும். நிலையான அரசு இருந்தால்தான் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற முடியும்," என்றார் திருநாவுக்கரசர்.