ஆளுநர் மீது வழக்கு: சு.சுவாமியின் எச்சரிக்கை

ஆளுநர் மீது வழக்கு: சு.சுவாமியின் எச்சரிக்கை

1 mins read

சென்னை: தமிழக அரசியல் களம் ஏற்கெனவே படுசூடாக உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தன் பங்குக்கு பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக அரசியல் நெருக்கடிக்கு இன்று மாலைக்குள் முடிவு காணாவிட்டால், ஆளுநர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்பது சுப்பிரமணியம் சுவாமியின் வாதமாகும். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இது தொடர்பாக தன் முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.