1500 சேவல்கள் களம் கண்ட போட்டி

1 mins read
73f74e90-44b5-4beb-9895-4a9aeaa2df6a
-

தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி சனிக்கிழமை தொடங்கி யது. 1,500 சேவல்கள் பங்கேற்றன. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. 30 களங்களில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் ஒருமணி நேரம் வழங்கப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம் பிடித்தாலோ அந்த சேவல் தோல்வியைத் தழுவியதாகக் கருதப்படுமாம். படம்: தகவல் ஊடகம்