சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலாவின் மிரட்டல் தொனியிலான பேச்சை அடுத்து சென்னை மாநகரில் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் போலிசார் திடீரென இருசக்கர வாகன அடையாள அணிவகுப்பு நடத்தினர். பாதுகாப்பு தொடர்பிலான பொதுமக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு தங்கும் விடுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
போலிசார் திடீர் அணிவகுப்பு
1 mins read

