166 ஆண்டு பழமையான நீராவி எஞ்சின் மீண்டும் இயக்கம்

166 ஆண்டு பழமையான நீராவி எஞ்சின் மீண்டும் இயக்கம்

1 mins read
a369fc28-61e6-4e52-8fb7-41da6c465201
-

நீராவியால் இயக்கப்படும் உலகின் ஆகப் பழமையான 'ஃபேரி குவீன்' ரயில் எஞ்சின் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 166 ஆண்டு பழமையான இந்த ரயில் எஞ்சினின் பல முக்கிய பாகங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதால் பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ரயில் எஞ்சினின் பாகங்கள் மீண்டும் பொருத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு டெல்லி கன்டோன்மெண்ட் நிலையம், ஹரியானாவின் ரெவாரி நிலையம் ஆகிய வற்றுக்கு இடையே 123 கிமீ. தூரத்துக்கு செல்லக்கூடிய ரயில் பெட்டிகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. படம்: இணையம்