முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 500 பேர் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 500 பேர் கைது

1 mins read
cc3707a8-d087-4e08-8115-bc16024a719a
-

சென்னை: அதிமுக உட்கட்சிப் பூசல் காரணமாக தமிழக அரசி யல் களத்தில் பரபரப்பு நிலவும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழ வதும் ஏறத்தாழ ஐநூறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகள் எனக் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 43, ராமநாதபுரத்தில் 10 பேர், சென் னையில் 100 பேர் என ரவுடிகள் கைதாகி உள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த இவர்கள் திட்ட மிட்டிருந்ததாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டு இருப்ப தாகவும் கூறப்படுகிறது. கைது நடவடிக்கை நீடிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகை முன்பு குவிக்கப்பட்ட போலிசார் படம்: ஊடகம்