சென்னை: எதிர் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூர் என்ற பகுதியில் அமைந்துள்ள சொகுசு தங்கு விடுதியில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களில் 9 பேருக்கு நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை கூவத்தூர் தங்குவிடுதிக்குள் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைந்ததாக தகவல் வெளியானது. எம்எல்ஏக் களில் சிலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாகவும் அவர் களில் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கூவத்தூர்: 9 எம்எல்ஏக்களின் உடல்நிலை திடீர் பாதிப்பு
1 mins read

