தலைமைச் செயலகம் வந்த முதல்வருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

தலைமைச் செயலகம் வந்த முதல்வருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

1 mins read
64dccd33-88cf-4872-8647-bac4fff28e17
-

கடந்த 5ஆம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகிய பன்னீர்செல்வம் நேற்று தலைமைச் செயலகம் வந்தார். இது குறித்த அறிவிப்பு முன்பே வெளியானதால், அவரது ஆதரவாளர்கள் பலரும் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற அவருக்கு சாலையின் இருபுறமும் கூடி நின்று வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் வாகனத்தை நிறுத்தி பொதுமக்களிடம் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பெற்றார் முதல்வர். சில இடங்களில் அவரது ஆதரவாளர்கள் சாலையில் பூக்களைத் தூவி அவரை வரவேற்றனர். படம்: சதீஷ்