பன்னீரை ஆதரிக்கும் பதினோரு எம்எல்ஏக்கள்

பன்னீரை ஆதரிக்கும் பதினோரு எம்எல்ஏக்கள்

1 mins read

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் இரண்டு சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரிக்கும் எம்எல்ஏக்க ளின் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் சரவணன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததை யடுத்து இந்த அணியில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 8 ஆகவும் எம்பிக்கள் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் செம்மலை நேற்று முன்தினம் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ சின்னராஜும் முதல்வர் அணிக்குத் தாவினார். இதற்கிடையே மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் காவல்துறை தலைவருமான நட்ராஜும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறியுள்ளார்.