மொத்தம் ரூ.130 கோடி அபராதம்

மொத்தம் ரூ.130 கோடி அபராதம்

1 mins read

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ரிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்ட சொத்துகளை விற்று மொத்தம் ரூ.130 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் முதல் குற்ற வாளியான ஜெயலலிதா ரூ. 100 கோடி அபராதம் கட்டவேண்டும். எனவே, மறைந்த ஜெயலலிதா விடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி காலணிகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதம் செலுத்தப்பட உள்ளது. ஜெயலலிதா வீட்டை சோதனை செய்தபோது 750 ஜோடி காலணிகள், 10,500 புட வைகள், 750 பட்டுப் புடவைகள், 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப் பற்றப்பட்டன. இவை அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் காவல் துறை பாதுகாப்போடு வைக்கப் பட்டுள்ளது.