பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதையடுத்து அச்சிறையில் உள்ள மூன்று அறைகள் இவர்களை அடைப்பதற்காக தயார்படுத்தப்படுவதாக நேற்று மாலை தகவல் வெளியானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் நேற்று முன்தினம் சிறை நிர்வாகத்தை வந்தடைந்ததாகவும் அதையடுத்தே தண்டனை பெற்றவர்களை அடைப்பதற்கான அறைகளை தயார்படுத்தும் பணி துவங்கியதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
சசிகலா அடைக்கப்படும் சிறை அறையின் துப்புரவுப் பணி ஆரம்பம்
1 mins read

