எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மீது வழக்குப்பதிவு

எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மீது வழக்குப்பதிவு

1 mins read
aeb72706-b346-4f20-a56d-b30edcafd388
-

சென்னை: அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கடத்திச் சென்று சொகுசு தங்கு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி இருப்பதாகவும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள் ளது. இதனால் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. சசிகலா ஆதரவாளராக இருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்து முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். அப்போது தம்மைக் கடத்திச் சென்று சிலர் விடுதியில் அடைத்து வைத்ததாக அவர் புகார் எழுப்பினார். இந்நிலையில் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.