இபிஎஸ் அரசு தப்புமா, ஓபிஎஸ் கை ஓங்குமா

இபிஎஸ் அரசு தப்புமா, ஓபிஎஸ் கை ஓங்குமா

1 mins read
6c6fc2a9-90bf-442f-a29d-fd70715b316e
-

தமிழக சட்டமன்றத்தில் கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையிலான அரசு தப்புமா அல்லது எதிர்பாராத முடிவு ஏற்படுமா என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும். ஆளும் கட்சியாகக் கருதப் படும் அதிமுக இரண்டாகப் பிளவு பட்டு உள்ளதால் புதிய முதல்வர் தமது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட் டதைத் தொடர்ந்து தமிழக சட்ட மன்றம் இன்று முற்பகல் 11 மணிக்குக் கூடவிருக்கிறது. இபிஎஸ் அரசாங்கத்துக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கைக்கு மேலாக தங்களிடம் உள்ளதாகக் கூறும் இபிஎஸ் மொத்தம் 124 எம்எல்ஏக் கள் தமது அரசுக்கு ஆதரவாக இன்று வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.