சென்னை: காவல்துறையிடம் முன் அனுமதி இன்றி மெரினா கடற் கரையில் மு.க.ஸ்டாலின் தலைமை யில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குப் பதிவானது. நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர். அப்போது அவைக் காவ லர்களால் சரமாரியாகத் தாம் தாக் கப்பட்டதாகவும் தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் எழுப்பினார். இதையடுத்து ஆளுநர் மாளி கைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அவர் புகார் தெரிவித்தார். பின்னர் நேராக மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், சட்டப்பேரவை நிகழ்வு களைக் கண்டித்து திடீர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள். படம்: சதீஷ்
திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
1 mins read
-

