சென்னை: உலகத் தாய்மொழி தினம் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்குத் தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மொழியைப் பேணிக்காக்க அனை வரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் தாய்மொழி தினத்தையொட்டி நடந்த பேரணி யில் ஏராளமான மாணவ, மாண வியர், இளையர்கள் பங்கேற்றனர். மேலும் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டனர். திரைப்பட நடிகர் சத்யராஜ் பேரணியின் முடிவில் பேசுகையில், தமிழர்கள் தமிழில் பேசுவதை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
சிறப்பாகக் கொண்டாடப்பட்ட உலக தாய்மொழி தினம்
1 mins read
-

