பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும்: ஜெயாவின் அண்ணன் மகன் தீபக்

பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும்: ஜெயாவின் அண்ணன் மகன் தீபக்

1 mins read

சென்னை: அதிமுகவுக்கு தற்போது தலைமையேற்கும் தகுதி பன்னீர்செல்வத் திற்கே உண்டு என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம் தமக்கும் தன் சகோதரி தீபாவுக்கும்தான் சொந்தம் என்று தெரிவித் துள்ள அவர், நீதிமன்றம் செலுத்த உத்தரவிட்ட அபராதத்தை கடன் வாங்கி தாமே தனியாக கட்டத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இப்பேட்டி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்