வேண்டும் என்றே கலவரம் செய்து ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சி: தினகரன் புகார்

வேண்டும் என்றே கலவரம் செய்து ஆட்சியைப் பிடிக்க திமுக முயற்சி: தினகரன் புகார்

1 mins read
9ffea027-27ea-40c4-8503-0b4e18582591
-

சென்னை: சட்டப்பேரவையில் வேண்டுமென்றே கலவரம் செய்து அதிமுக ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலினும் திமுகவும் திட்ட மிட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலராக அக்கட்சியின் தலை மையகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்க ளிடம் அவர் பேசினார். அப்போது திமுகதான் தங்களுக்கு முக்கிய எதிரி என்று குறிப்பிட்டார். "மக்களுக்காக என்ற போர் வையில் திமுகவினர் பல பிரச்சி னைகளை ஏற்படுத்தி வருகின் றனர். பேரவையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விதிகளுக்கு உட்பட்டுதான் சபா நாயகர் பேரவையை நடத்தினார். அதில் குறை காண ஒன்றும் இல்லை. "அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக் கம் செலுத்தமாட்டார்கள். நான் திடீ ரென அதிமுகவுக்கு வந்த வன் அல்ல. ஜெயலலிதா அப் போதே எனக்குப் பல பதவிகளை வழங்கினார். ஜெயலலிதா கூறிய தால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தேன்," என்றார் தினகரன்.

நேற்று அதிமுக தலைமையகம் வந்த தினகரன். படம்: ஊடகம்

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்