சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை ஏன் சந்திக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற அடுத்த நாளே எடப்பாடி பழனி சாமி பெங்களூரு செல்வார் எனக் கூறப்பட்டது. எனினும் நேற்று வரை அவர் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. இந்நிலையில் கர்நாடகா சிறைத்துறை விதித்துள்ள தடை காரணமாகவே எடப்பாடி பழனி சாமி = சசிகலா சந்திப்பு இது வரை சாத்தியமின்றிப் போன தாகக் கூறப்படுகிறது. சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவுக்குத் தமிழக போலிஸ் டிஜிபி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு; முதல்வர் பழனிசாமி தவிப்பு
1 mins read

