சென்னை: ரயிலிலிருந்து விழுந்து மூவர் மரணம்

சென்னை: ரயிலிலிருந்து விழுந்து மூவர் மரணம்

1 mins read
1f9c7afa-ae85-432e-b013-ab7891bb5b36
-

சென்னை புறநகரில் நேற்றுக் காலை நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தில் மூன்று பேர் மரண மடைந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கற்பட்டுக்கு மின்சார ரயில் கள் இயக்கப்படுகின்றன. இவற் றில் சாதாரண வேகம், விரைவு என இருவகை உண்டு. செங்கற்பட்டில் இருந்து நேற்றுக் காலை விரைவு மின் சார ரயில் சென்னை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. பரங்கிமலை, பழவந்தாங்கல் நிலையங்களுக்கு இடையில் காலை 9 மணியளவில் ரயில் சென்றுகொண்டு இருந்தது. காலை உச்சநேரம் என்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயிலுக்குள் இடம் இல்லாததால் ஏராளமான பயணிகள் படிக்கட்டில் தொங் கியபடி பயணம் செய்தனர்.

ரயில் தண்டவாளத்தின் அருகே விழுந்து படுகாயமுற்ற ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுமுன் முதலுதவி சிகிச்சை பெற்றார். படம்: சதீஷ்

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்